Saturday, 23 March 2019


கண்ணீர் விட்டா வளர்த்தோம்???
தாவரங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம
நன்றாக உற்றுப் பார்த்தால் தெரியும்..பலகாலமாக உண்ணாமல் முகத்தை தூசி கொண்டு இந்த கேடு கெட்ட உலகத்தை பார்க்க சிக்காமல். .. அதன் தோய்ந்த முகத்துடன்...நலிந்த நிலையிலிருக்கும் அதன் தேகமும்...
பார்த்ததும் உணர்த்தும்...அது உண்டு வெகு காலமாகி விட்டது என்று...
ஆனால்....தாவரங்கள் நம்மைவிட உடன்பிறப்பு கொண்டவை..
அவை நம்மிடம் ஒருபோதும் கையேந்தி யாசகம் கேட்டதேயில்லை. அவைகளின் வைராக்கியத்துடன் நம்மை ஒப்பிடுவதே அவலம்..
மனிதன்..சின்னஞ்சிறு பிரச்சனை என்றால்.. உடனே...சாலைமறியல்..உண்ணாவிரதம் என கையில் எடுத்துக் கொள்கிறோம். என்றாவது ஒருநாள்...ஒருபொழுதாவது அதன் நிலையில் நின்று பார்த்திருக்கிறோமா?
நமக்காக வாய்த்த அடிமைகள் என்ற அடிமட்ட எண்ணத்தில்தான் நாம் அவற்றை கண்ணுறுகிறோம்.
அதையெல்லாம் ஒருபோதும் பொருட்படுத்தாமல்.. அட்சய பாத்திரம் ஏந்தி நமக்கு கொடுத்து கொண்டேதான் வருகிறது..இந்தப்பிறவி அவற்றிற்கு கொடுப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டது என்பது போலவே உள்ளது..
நாம்தான் எத்தனை சுயநலவாதிகள்?
நமக்கு ஒரு சிறிய அசௌகரியம் என்றாலும் உடனே தாசில்தார்...ஆட்சியர்..அமைச்சர்... என அனைத்து அடுக்குகளையும் புரட்டிப் போட்டு அதை வெற்றிக் களிப்புடன் பெருமிதம் கொள்கிறோம்..
தாவரங்கள் என்றேனும் சுயதம்பட்டம் அடித்துக்கொணடதாக நாம் உணர முடியுமா?
யார் சொன்னது??
மனிதன் ஆறறிவு படைத்த உயர்ந்த உயிரினமென்று????
சுயநலத்தில் முற்றிலும் ஊறிப்போய்விட்ட நாம் அனைத்து பிற உயிர்களையும் நம் கீழடியில் வைத்து பாவிக்கும் சர்வாதிகாரிகள்..
நமக்கு குடிக்க..குளிக்க...சமைக்க தண்ணீர் இல்லை எனில் மழை இல்லை என வானமே எல்லையென ஒப்பாரி வைத்து குமுறுகிறோம்..பஞ்சம் பிழைக்க வேறு இடத்திற்கு பெயர்ந்து விடுகிறோம்...நம்முடன் நமக்காகவே வாழும் தாவரங்களை அனாதைகளாகவும் அகதிகளாகவும் விட்டுச் செல்வது எந்த வகையில் உயர்ந்தது?
யாரங்கே??? யார் சொன்னது?
மனிதர்கள் ஆறறிவு படைத்த உயர் ரக ஜென்மங்களென???
இதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம்..
அவற்றை வேரோடு குரல் வளையை நெரித்து அற்பமாக வீசி எறிகிறோம்.
நம் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை சாலைகள் மூலமாக அடைய முடியும் என யார் கண்டு பிடித்தது..
புதிய சாலைகள்... அகலப்படுத்தப்படும் சாலைகள் என எங்கு பார்த்தாலும் மரங்கள் பிணக்குவியலாக...
ஈவு இரக்கமில்லாமல்...
(.நா சபை என்ன செய்கிறது?
அதுவும் மனித நலம் மட்டும் பேணும் சர்வதேச அங்கமாகவே மாறிவிட்டதோ?)
எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் லாரிகளில் சவப்பெட்டிகளின்றி ..செத்தும் கொடுக்கும் சீதக்காதிகளாக ...
ஆம் ..அவைகளின் பயண்பாடுதான் நமக்கு முற்றிலும் தெரியுமே!!!????
அவற்றை மரணிக்க முடியாது.
என் மூச்சு முட்டுகிறது..
தாவரங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நமக்கு மூச்சு முட்டாமல்...வேறென்ன செய்யும்?
கடவுளே.. நீ இருந்தால்..
ஏதேனும் செய்...
என் இனத்தை நம்பி பயணில்லை. முற்றிலும்
சுயமாகவே சுருங்கி விட்டது..
ஒரு புதிய அவதாரம் எடுத்து இந்த இயற்கை உயிர்களை பலி வாங்கக்காத்திருக்கும் எம் இனத்திடமிருந்து காப்பாற்ற
எதையும் செய்..
ஆம்
எதையும் செய்..
அவை உண்ணாவிரதம் இருந்தாலும்..
பிணம் தின்னும் கழுகுகள் போல் எம் இனம் இப்பவும் காத்திருக்கிறது..
ஒன்றும் இயலவில்லை என்றால்
தாவரப் பிணங்களையாவது கொடுங்கோலர்களிடமிருந்து காப்பாற்றி நல்லடக்கம் செய்வோம்..
என்று தணியும் இந்த தாகம்??